Michael Sandel: Why we shouldn't trust markets with our civic life

Michael Sandel: Why we shouldn't trust markets with our civic life

SUBTITLE'S INFO:

Language: Tamil

Type: Robot

Number of phrases: 279

Number of words: 1251

Number of symbols: 9824

DOWNLOAD SUBTITLES:

DOWNLOAD AUDIO AND VIDEO:

SUBTITLES:

Subtitles generated by robot
00:00
Translator: Elanttamil Maruthai Reviewer: Kalyanasundar Subramanyam இக்கேள்வியை மீண்டும் நாம் நினைத்துப்பார்க்க வேண்டும் சமூகத்திற்கு பணத்தின் பயன்பாடும் சந்தையின் பயன்பாடும் என்ன இன்றுவரை ஒரு சில பொருட்களைப் பணத்தால் வாங்க முடியாது நீங்கள் சிறைச்சாலைக்கு அனுப்பபட்டால் சந்தா பார்பரா, கலிபோர்னியா சிறையில் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் பொதுவான தங்கும் வசதி உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நீங்கள் வசதி மேம்படுத்திய சிறை அறையை வாங்கமுடியும் உண்மை. எவ்வளவு என்று நினைக்கின்றீர்கள்? எவ்வளவு ஐந்நூறு டாலர்? இது ரிட்ஸ்-கார்ல்தன் கிடையாது. சிறைச்சாலை! ஒரு இரவுக்கு 82 டாலர் ஒரு இரவுக்கு 82 டாலர் நீங்கள் கேளிக்கை பூங்காவிற்கு சென்று நீண்ட வரிசையில் நிற்க விரும்பா விட்டால் பிரபலமான சில விளையாட்டுகளில் பங்கெடுக்க புதிய வழிமுறை உள்ளது பல கேளிக்கை பூங்காக்களில் அதிகமாகப் பணம் செலுத்தினால்
01:09
வரிசையை முந்தி செல்ல முடியும் இதனை விரைவு அல்லது VIP வரிசை என்கின்றனர் இது கேளிக்கை பூங்காவில் மட்டும் நடக்கும் சம்பவம் அல்ல வாசிங்டன் டி.சி-இல் சில சமயம் நீண்ட வரிசை காத்திருக்கும் முக்கிய காங்கிரஸ் வழக்கினை கேட்பதற்கு சிலருக்கு நீண்ட வரிசையில் நிற்க பிடிக்காது இரவிலும் ,மழையிலும் கூட ஒரு சிலருக்கும் ஆதரவு திரட்டுவோருக்கும் சில வழக்குகளை கேட்க ஆர்வமுள்ளவர்களுக்கும் ஆனால் காத்திருக்க பிடிக்காதவர்களுக்கேன்றே, சில நிறுவனங்கள் உள்ளன 'வரிசையில் நிற்கும்' நிறுவனங்கள் நீங்கள் அவர்களை நாடலாம் அதற்கு அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை தர வேண்டும் அவர்கள் வேலை வீடு இல்லாதவர்களை அதற்கு அமர்த்துகிறார்கள் அவர்கள் நேரம் வரும் வரை வரிசையில் காத்திருப்பார்கள் வழக்கு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சம்மந்தப்பட்ட நபர் வந்து வரிசையில் நின்றுவிடுவார் அவருக்கு அறையில் முன்னிருக்கை கிடைத்து விடும் கட்டணம் கட்டிய வரிசை. சந்தையின் முறைமையினால் இது ஏற்படுகிறது சந்தை சிந்தனை மற்றும் சந்தைக்கான தீர்வு
02:10
மிகப்பெரிய தளங்களிலும் நடைபெறுகிறது நாம் இப்பொழுது எப்படி போர் புரிகிறோம் உங்களுக்கு தெரியுமா, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தனியார் இராணுவத்தினர்தான் அதிகமாக இருந்தனர் அமெரிக்க இராணுவத்தினரை விட இது நாம் பொது விவாதம் நடத்தியதால் விளைந்த தல்ல நாம் போருக்கு, ஒப்பந்த சேவை வேண்டி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க போகிறோமா ? இதுதான் இப்பொழுது நடக்கிறது கடந்த முப்பது ஆண்டுகளாக நாம் அமைதியான புரட்சிகரமான முறையில் வாழ்ந்து வருகிறோம் அதனை உணராமலேயே நாம் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் சந்தை பொருளாதார முறையிலிருந்து சந்தை சமூகமாக மாறிவிட்டோம் வேறுபாடு என்னவென்றால்: சந்தை பொருளியல் என்பது ஒரு கருவி விலையுயர்ந்த சிறந்த கருவி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆனால் சந்தை சமூகம் என்பது எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்க கூடியது
03:10
சந்தை சார்ந்த சிந்தனை, இது வாழ்கையின் நடைமுறையாகிவிட்டது சந்தையின் விழுமங்கள் அனைத்தும் ஆதிக்கம் செலுத்துகின்றன வாழ்வின் எல்லா கூறுகளிலும் தனிப்பட்ட உறவுமுறை, குடும்ப வாழ்வு, சுகாதாரம், கல்வி அரசியல்,சட்டம்,சமூக வாழ்க்கை இப்பொழுது மட்டும் என்ன கவலை நாம் சந்தை சமூகமாக மாறுவதில் ? இரு காரணங்களுக்காக என நினைக்கின்றேன் ஒன்று ஏற்ற்த்தாழ்வு அற்ற நிலை பணத்தால் அனைத்தையும் வாங்க கூடிய சூழல் அதிகம் இருந்தாலும் அறவே இல்லாவிட்டாலும் சிக்கல்தான் ஒன்றுக்கு மட்டும் பணம் பயன்படுகிறது என்று வைத்துக்கொள்வோம் விடுமுறைக்கு பாய்மரக்கப்பலில் , அல்லது BMW ல் ல செல்ல ஏற்றத்தாழ்வுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது ஆனால் பணம் அனைத்தையும் கண்காணிக்கும் போது நல்வாழ்விற்கான அடிப்படை தேவைகள்
04:12
நல்ல சுகாதாரம், சிறந்த கல்வி அரசியல் பலம் மற்றும் செல்வாக்கு இவை அனைத்தயும் பணம் நிர்ணயித்தால் ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்தையும் சந்தைமயப்படுத்தி விடும் ஏற்றத்தாழ்வினை இன்னும் அதிகப்படுத்தும் சமூகத்தில் பின் விளைவுகளை ஏற்படுத்தும் அது கவலையடையக்கூடிய ஒரு காரணம் இரண்டாவது காரணம் ஏற்றத்தாழ்வினைத் தவிர்த்து இதுதான் சில சமூக பொருட்களும் செயல்முறைகளும் சந்தை சிந்தனையும் சந்தை மதிப்பும் சேரும்பொழுது அது அடிப்படை சமூக நடைமுறையையே மாற்றும் நம்முடைய மனப்போக்கையும் இயல்பையும் மாற்றும் அதனைப்பற்றி சிந்திப்பது பலன் தரும் நான் ஒரு எடுத்துகாட்டை கூற விரும்புகின்றேன் சிக்கலான சந்தை முறைமையைப் பற்றி ஊக்குவிப்பிற்கு பணம் கொடுத்தல்
05:15
நிறைய பள்ளிகளில் இந்த சிக்கலினால் அவதிபடுகின்றனர் மாணவர்களை ஊக்கமூட்ட மோசமான பின்னணி உடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க பள்ளியில் சிறப்பாக விளங்க சில பொருளியல்வாதிகள் இதற்கு சந்தை தீர்வினை முன் வைக்கின்றனர் நல்ல புள்ளிகள் வாங்கும் குழந்தைகளுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பது மேல் நிலை தேர்வில் சிறந்த புள்ளிகள் பெறுவதற்கு அல்லது புத்தகம் படிப்பதற்கு அவர்கள் இதனை முயன்றிருக்கின்றனர் அவர்கள் சில பரிசோதனைகளையும் செய்துள்ளனர் முக்கியமான சில அமெரிக்க நகரங்களில் நியூ யோர்க், சிக்காகோ, வாசிங்டன் டி.சி A பெற்றால் 50 அமெரிக்க டாலர் கொடுத்தனர் B பெற்றால் 35 அமெரிக்க டாலர்கள் டாலசிலும் டெக்சாசிலும் அவர்கள் ஒரு திட்டத்தை அமல்படுத்தினர் எட்டு வயது குழந்தைகள் ஒரு புத்தகம் படித்து முடித்தால் 2 டாலர் ஒரு சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர் ஒரு சிலர் இலக்கை அடைய பணம் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்தனர் வாருங்கள் இங்குள்ளவர்கள் என்ன நினைகின்றார்கள் என்று பார்போம் நீங்கள் ஒரு முக்கியப் பள்ளியின் முதல்வர் என்று வைத்துக்கொள்வோம்
06:19
ஒருவர் ஒரு திட்டத்துடன் உங்களிடம் வருகின்றார் அறவாரியம் அமைப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் நிதி கொடுக்க தயாராக உள்ளனர் நீங்கள் எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை யார் இதனை ஏற்றுக்கொள்வீர்கள் யார் மறுப்பு தெரிவிப்பீர்கள் இதற்கு உங்கள் கைகளை தூக்கி முடிவை சொல்லுங்கள் முதலில் எத்தனை பேர் இதனை முயற்சி செய்து பார்போம் என நினைகின்றீர்கள்? கைதூக்குங்கள் எத்தனை பேர் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றீர்கள் சரி அதிகமானோர் எதிர்கின்றனர் ஆனால் குறிப்பிடத்தக்க அளவினர் ஆதரவு தருகின்றனர் வாருங்கள் கலந்துரையாடுவோம் சரி எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் இருந்து தொடங்குவோம் முயற்சிக்கும் முன்பே தகுதியற்றதெனத் தள்ளி விட யாரும் இருக்கின்றீர்களா அதற்கு என்ன காரணம் யார் கலந்துரையாடலை தொடங்குகின்றீர்கள் ஏயக் மோசஸ்: ஹலோ, நான் ஏயக் நான் நினைகின்றேன் அது உள்ளார்ந்த தன்முனைப்பை கொன்றுவிடும் தானாகவே படிக்க ஆசைபடும் குழந்தைகளுக்கு இந்த ஊக்குவிப்பு தேவை இல்லை பணம் கொடுத்தால் அது அவர்களின் நடத்தையை மாற்றிவிடும் மைக்கல் சென்டல் : உள்ளார்ந்த ஊக்கத்தை எடுத்து விடும் .
07:21
அப்படி என்றால், உள்ளார்ந்த தன்முனைப்பா வேண்டும் ? எச்.எம்: சரி உள்ளார்ந்த தன்முனைப்பு கற்றுகொள்வதற்க்கு இருக்கவேண்டும் எம்.எச்: கற்றுக்கொள்ள; எச்.எம்: உலகை தெரிந்து கொள்ள நீங்கள் அவர்களுக்கு கொடுப்பதை நிறுத்தினால் அடுத்து என்னவாகும் ? அவர்கள் படிப்பதை நிறுத்தி விடுவார்களா ? எம்.எச்: வாருங்கள் யாரும் ஆதரவளிக்கின்றார்களா என பார்போம், இதனை முயற்சிப்பது பலன் அளிக்கும் என யார் நம்புகின்றீர்கள் எலிசபெத் லொப்தஸ்: நான் எலிசபெத் லொப்தஸ் நீங்கள் முயற்சித்தால் பலன் கிடைக்கும் என்கின்றீர்கள் ஏன் முயற்சிக்க கூடாது பரிசோதனை செய்து பலனை காண்பதுதானே எம்.எஸ்: அளவு. எதனை நீங்கள் அளக்கின்றீர்கள் ? நீங்கள் அளப்பது எண்ணிக்கை இ.எல்: எத்தனை புத்தகங்களை அவர்கள் படிக்கின்றனர் தொடர்ந்து அவர்கள் எத்தனை புத்தகங்களை படிக்கின்றனர் நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தியப்பிறகு எம்.எஸ்: ஓ நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தியப்பிறகு சரி , என்ன நினைகின்றீர்கள் ? எச்.எம்: உண்மையை சொல்லவேண்டும் என்றால் இது யாரையும் புண்படுத்தாது என்று நினைக்கின்றேன். இதுதான் அமெரிக்கர்களின் முறை சிரிப்பு, கைத்தட்டல் எம்.எஸ்: சரி இக்கலந்துரையாடல் வழி பெறப்படுவது என்ன
08:21
எழுந்தது இக்கேள்விகள் பண ஊக்குவிப்பு துரத்துமா அல்லது சீரழிக்குமா அல்லது உயரிய தன்முனைப்பை வழங்குமா ? உள்ளார்ந்து நாம் சொல்ல விரும்பும் படிப்பினை கற்பதையும் படிப்பதையும் அவர்கள் மகிழ்ச்சியாக மேற்கொள்ளவேண்டும் அவர்களின் சொந்த நன்மைக்காக விளைவினைப் பற்றி பலர் மாறுபடுவர் அதுதான் இப்பொழுது கேள்வி அச்சந்தை முறைமை பண ஊக்குவிப்பு தவறான படிப்பினையை கொடுத்துவிடும் அப்படியென்றால் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் என்னவாகும் நான் உங்களுக்கு அப்பரிசோதனை முடிவை தெரிவிக்கவேண்டும் நல்ல மதிப்பெண்களுக்கு பணம் கொடுக்கும் பரிசோதனை ஒரு கலந்த முடிவை கொடுத்தது சிறந்த மதிப்பெண்கள் பெருவதற்கு அவ்வளவாக உதவவில்லை இரண்டு டாலர் ஒரு புத்தகத்திற்கு என்றவுடன் நிறைய புத்தகத்தைப் படித்தார்கள் ஆனால் பக்கம் குறைவான புத்தகங்களையே படித்தனர் சிரிப்பு
09:22
ஆனால் கேள்வி என்னவென்றால் இவர்கள் பின்னாளில் எப்படி இருப்பார்கள் ? ஆறிவை பெருக்கி கொள்ள படித்தார்களா ? ஆல்லது படித்தால் பணம் கிடைக்கும் என்பதால் படித்தார்களா ? தவறான காரணத்திற்காக படிக்க தொடங்குகின்றார்களா ஆல்லது படிப்பது அவர்களுக்கு பிடித்த ஒன்றாக மாறுகிறதா இந்த விவாதம் வெளிகொணரும் செய்திகளை கூட பல பொருளியல்வாதிகள் கவனிப்பதில்லை பொருளியல்வாதிகள் என்ன நினைக்கின்றனர் என்றால் சந்தைகள் இயக்க விளைவுகள் அற்றது என்று பரிமாறும் பொருள்களை தீண்டுவதோ கேடு விளைவிப்பதோ இல்லை சந்தை பரிமாற்றம் என்பது அவர்கள் நினைக்கின்றனர் பரிமாறும் பொருள்களை குறித்த கருத்து அல்லது மதிப்புகளை மாற்றாது இது உண்மையாக இருக்கலாம் நாம் அடிப்படை பொருட்களைப் பற்றி பேசினால் நீங்கள் ஒரு தட்டை திரை தொலைக்காட்சியை என்னிடம் விற்றால் அல்லது எனக்கு ஒரு பரிசினைக் கொடுத்தால் அது இரண்டும் ஒரே மாதிரியான பலனைத் தான் தரும் அது இரண்டும் ஒரே மாதிரியான செயலினைத் தான் செய்யும் ஆனால் இரண்டும் ஒன்றுதான் என்பது உண்மையில்லாமல் இருக்கலாம் நாம் பொருளற்றவையைப் பற்றி பேசினால்
10:23
உதாரணமாக கற்றல் கற்பித்தல் என வைத்துக்கொள்வோம் அல்லது சமூக வாழ்வு என வைத்துக்கொள்வோம் இந்த தளங்களில் நாம் சந்தை முறைமையை அமல்படுத்தினால் பண ஊக்குவிப்பு சிக்கலினை உருவாக்கும் பொருளற்றவையின் தன்மையை வெகுவாகப்பாதிக்கும் அதனைப் பற்றி சிந்திப்பது பயனானது நாம் சந்தையையும் வணிகத்தையும் பார்க்கும்பொழுது அது பொருள் தளத்தையும் தாண்டி போகும்பொழுது பொருளின் தன்மையையே மாற்ற வல்லது சமூக செயல்பாட்டின் அர்த்தத்தையே மாற்றும் கற்றல் கற்பித்தல் எடுத்துகாட்டை பார்ப்போம் சந்தை எங்கு தொடங்குகிறது என நாம் நம்மையே கேட்டுக்கொள்ளவேண்டும். அது தேவைப்படாத இடம் எது அது எங்கு பாதிப்பை உருவாக்கும் பண்பும், மனப்பாங்கும் முக்கியமான ஒன்று இந்த விவாதத்தை தொடங்குவதற்கு நாம் எதையாவது செய்தாக வேண்டும்
11:24
அது பொதுமக்கள் மத்தியில் அதன் மதிப்பும் அர்த்தமும் பொதிந்ததாக இருக்க வேண்டும் நம்முடைய வெற்றியாக கருதும் சமூக செயல்முறைகள் நம் உடலிலிருந்து குடும்ப வாழ்கை வரை தனிப்பட்ட உறவிலிருந்து சுகாதாரம் வரை சமுக வாழ்வைப் பற்றிய கற்றல் கற்பித்தல் இவை பிரச்சனைக்குறிய கேள்விகள் எனவே நாம் இதிலிருந்து தப்பிக்க நினைக்கின்றோம் குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளில் சந்தையைப் பற்றிய சிந்தனை ஆற்றலுடனும் மதிப்புடனும் வளர்ந்துள்ளது தற்போதைய நமது விவாதம் ஒன்றுமில்லாத நிலையில் இருக்கின்றது நன்னெறி அர்த்தம் அற்ற நிலையில் கருத்தில் மாறுபடுவோம் என பயந்து இக்கேள்விகளில் இருந்து தப்பிக்க நினைக்கின்றோம் ஆனால் சந்தையை ஆழ்ந்து பார்க்கும்பொழுது பொருளின் தன்மையை மாற்றுகிறது நாம் இது தொடர்பாக விவாதங்கள் நடத்த வேண்டும் இது மிகப்பெரிய ஒரு கேள்வி பொருட்களை எப்படி மதீப்பிடுவது
12:25
இதில் அனைத்தையும் சிதைக்கவல்லது விளைவு ஒன்றுள்ளது, அதாவது எல்லாவற்றிற்கும் விலை வைப்பது பொதுவான ஒன்றாகிவிட்டது நாம் அனைவரும் சமம் எனும் கூற்று சரிசமமற்ற வாழ்க்கை முறைக்கு எதிரானது வாழ்க்கை முறை அனைத்தையும் சந்தைப்படுத்துகின்றோம் வசதியுள்ளவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு இது கொண்டு செல்லும் பணிவுடன் வாழ நினைப்பவர்களின் வாழ்வு முறை வெவ்வேறாக இருக்கின்றது நாம் வேலை செய்கிறோம் பொருட்கள் வாங்குகின்றோம், விளையாடுகின்றோம் வெவ்வேறு இடங்களில் நம் குழந்தைகள் வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்புகிறோம் இது மக்களாட்சிக்கு ஏற்றதல்ல இது உங்களுக்கு திருப்தியாக இருக்கின்றதா, உங்களுக்கு தகுதி இருந்தால் கூட வரிசைக்கு முன் செல்ல காசு கொடுத்து இடத்தை வாங்குவதற்கு இதற்கு காரணம் இதுதான் மக்களாட்சி என்றால் சம உரிமை என்று அர்த்தம் இல்லை என்ன அதற்கு தேவையென்றால் சமுகத்தில் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்கையை வாழவேண்டும்
13:28
எது முக்கியம் என்றால் பல்வேறு சமுக பின்னணி பல்வேறு வாழ்கை முறை ஒன்றை ஓன்று எதிர்கொண்டால் ஒன்றுடன் ஓன்று மோதினால் நம்முடைய இயல்பான வாழ்வில் நமக்கு இதுதான் படிப்பினை நம்முடைய வேறுபாடுகளை களைந்து ஒரு முடிவுக்கு வருகின்றோம் இப்படிதான் பொதுவான ஒரு பொருளின் மீது நாம் அக்கறை கொள்கிறோம் இறுதியில் சந்தைக்கான கேள்வி என்னவென்றால் இது பொருளியல் கேள்வி அல்ல நாம் எப்படி சேர்ந்து வாழ போகிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வி எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கும் சமுதாயமாக நாம் மாறவேண்டுமா, அல்லது நன்னெறி மற்றும் சமூக பொருட்கள் என்று உள்ளதா இது சந்தைக்கு முரணான ஒன்று இதனை பணத்தால் வாங்க முடியாது மிக்க நன்றி கைத்தட்டல்

DOWNLOAD SUBTITLES: